தீமை செய்பவர் தனது தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறார். இவர் மற்றவர்களின் துன்பங்களில் மகிழ்பவர். வேண்டுமென்றே மற்றவருக்கு தீமை செய்பவர் தனக்கு தானே தீமையை தேடிகொள்பவர். மற்றவருக்கு தீமை செய்ய திட்டமிடுகின்ற நேரத்தில் பிறருக்கு நன்மை செய்வதை பற்றி சிந்தித்தால் நமக்கும் பிறருக்கும் நல்லது.
வேண்டுமென்றே எவருக்கும் தீமை செய்யக்கூடாது
திங்கள், 10 நவம்பர், 2008
ஞாயிறு, 2 நவம்பர், 2008
வைகறையில் துயில் எழு
துயிலை வெல்லதெரிந்தவர் வாழ்க்கையை வெல்லதெரிந்தவர். அதிகாலை துயில் எழல் அந்த நாளில் நமக்கு கிடைக்கும் முதல் வெற்றி. இதைத் தொடர்ந்து அந்த நாள் முழுவதும் பல வெற்றிகள் நம்மை வந்து சேறும்.
அதிகாலையில் விழித்தெழுவது சிறப்புடையது.
அதிகாலையில் விழித்தெழுவது சிறப்புடையது.
வெள்ளி, 31 அக்டோபர், 2008
ஒன்னாரைத் தேறேல்
நல்ல நண்பர்களைகூட எளிதில் அடையாளம் கண்டுகொள்ளலாம் ஆனால் உண்மையான எதிரியை அடையாளம் காண்பது கடினம். அவனை அடையாளம் கண்டு அவன் மீது நம்பிக்கை வைக்காமல் இருந்தால் நமது வாழ்வு முன்னேறும்.
எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.
எதிரிகளிடம் நம்பிக்கை கொள்ளக் கூடாது.
வியாழன், 30 அக்டோபர், 2008
ஓரம் சொல்லேல்
நடுமைக் காப்பது கடினம். ஆனால் எல்லா சூழலிலும் நடுநிலைக் காப்போர் அவர்களுடைய எதிரிகளாலும் போற்றப்படுவர். நடுநிலை காப்போர் தீர சிந்திப்பவர், நன்மை தீமை பகுத்தறிய தெரிந்தவர், மனசாட்சியின்படி நடப்பவர். அவர் எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பார், புகழ்ச்சிக்கு உள்ளாவார்.
ஒருதலைப் பட்சமாக கூறக்கூடாது.
ஒருதலைப் பட்சமாக கூறக்கூடாது.
வியாழன், 16 அக்டோபர், 2008
அறிமுகம்
அவனியில் எனக்கு அறிமுகம் தந்தது அம்மா அப்பா. யாரும் தெரியாது, எதுவும் தெரியாது, ஆனால் அனைவரையும் மற்றும் அனைத்தையும் தெரிய அடித்தளம் இட்டவர்கள் பெற்றோர். அன்புக்கு அறிமுகம்
அறிவுக்கு அறிமுகம்
ஆக்கத்துக்கு அறிமுகம்
அனைத்துக்கும் அறிமுகம் தந்த தாய் தந்தையை பேண்.
அறிவுக்கு அறிமுகம்
ஆக்கத்துக்கு அறிமுகம்
அனைத்துக்கும் அறிமுகம் தந்த தாய் தந்தையை பேண்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)